tamilnadu

சுரண்டையில் 3 நாள் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு, வெறிச்சோடிய பஜார்

தென்காசி, மே 18- சென்னையிலிருந்து வந்தவர்க ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் எதிரொலியாக சுரண்டையில் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் சென்னையி லிருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சுரண்டை மற்றும் வீகேபுதூர் தாலுகா பகுதிக ளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள்  முழு ஊரடங்கை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் ஆலோசனை பேரில், வீகே புதூர் தாசில்தார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஞாயிறன்று காலை சுரண்டையில் அனைத்து கடைக ளும் அடைக்கப்பட்டிருந்தன. பால், மெ டிக்கல் மற்றும் மருத்துவமனைகள் மட்டு மே திறந்திருந்தன. வாகனங்கள் இயங்க வில்லை‌. எப்போதும் பரபரப்பாக செயல்ப டும் காமராஜர் காய்கனி மார்க்கெட் வெ றிச்சோடிக் காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது. ஊரடங்கை முன்னிட்டு வீகேபு தூர் தாசில்தார் ஹரிஹரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீசார், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கண்மணி மற்றும்  அரசு அதிகாரிகள் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டனர்.

;