தூத்துக்குடி, ஆக.8- தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர் படத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் கோவையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த வாரம் ஊருக்கு வந்த நிலை யில் காய்ச்சல் அறிகுறியுடன் கோவில் பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று மதியம் திடீரென அந்த இளைஞர் மாயமானார். இதையடுத்து மருத்துவமனை நிர்வா கம் சார்பில் நாட்டின் புதூர் காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஜமீன் தேவர்குளம் சென்று விசார ணை நடத்தினர். ஆனாலும் மாயமான இளைஞர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணியில் காவல்துறையினர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.