tamilnadu

img

மகளிர் தின விழா பரிசு வழங்கல்

தூத்துக்குடி, மார்ச் 7- தூத்துக்குடியில் மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் நடை பெற்ற மகளிர் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்  நந்தூரி பல்வேறு போட்டிக ளில் வெற்றி பெற்ற மகளிர்க ளுக்கு பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டப த்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி, மகளிர்  தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன்,  தூத்துக்குடி மாநகராட்சி  ஆணையர் வீ.ப.ஜெய சீலன், கூடுதல் ஆட்சியர்  (வருவாய்) பா.விஷ்ணுசந்தி ரன் உள்ளிட்ட பலர் விழாவில்  கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் மாவட்ட இசைப்பள்ளி, சாரா இசை ப்பள்ளி, சைல்டு லைன் 1098 அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராமிய கலைக்கு ழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.