தூத்துக்குடி, அக்.12- கடந்த மாதம் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் போலீசார் நிலையத்திற்குட் பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு தூத்துக்குடி கருத்தபாலம் சந்திப்பு பக்கிள் ஓடை அருகில் எதிரி முருகன் மற்றும் சிவா (எ) சிவாலிங்கம் ஆகியோர் நின்று கொண்டிருந்த னர், அவர்களை விசாரணை செய்ததில் அவர்களிடம் விற்பனைக் காக 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், பணம் ரூபாய் 7,500 இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து மேற்படி கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.