தூத்துக்குடி, ஜூலை 31 தூத்துக்குடியில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மற்றும் அவரது தாய், தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் தம்பிராஜ் மகன் பெர்னாட்ஷா (59). இவரது மகளுக்கும் புன்னக்காயல் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் ஷெரிஃப் (29) என்பவருக்கும் திருமணம் முடிக்க கடந்த 18.01.2019 அன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஷெரிஃப் கோவாவில் உள்ள நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். நிச்சயதார்த்ததிற்கு பின் ஷெரிஃப் தனக்கு திரு மணத்தில் விருப்பமில்லை என்றும், ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்புவதாகவும் கூறிவிட்டா ராம். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடத்தியதன் மூலம் தனக்கு ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாப்பிள்ளை வீட்டார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாகவும் பெண்ணின் தந்தை பெர்னாட்ஷா தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஷெரிஃப், அவரது தாய், தந்தை ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.