தூத்துக்குடி, ஜூலை 30- தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இங்கு முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுகுமார் என்பவர் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகி றார். செவ்வாயன்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில், புதன்கிழமை காலை யில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது சுவரில் துளையிட்டு அங்கிருந்த ரூ.22,560 மதிப்புள்ள 40 மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கடை யின் சூப்பர்வைசர் சிப்காட் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.