தூத்துக்குடி, மார்ச் 7- தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம் மடத்து தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி யன் மனைவி ராமாத்தாள்(55). இவர், சுரண்டையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு வெகுநாள்களுக்குப் பின், வியா ழனன்று வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது, கதவில் பூட்டு, வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டிருந்தன. மேலும், பீரோவி லிருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் வெள்ளியன்று வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.