tamilnadu

img

கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்படாத வகையில் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி, ஜூன் 11- தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகை யில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்தார் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்க நல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்பு ணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, புதனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுப் பாட்டு தடுப்புப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வெளி வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்கவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலு வலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவல் ஏற்படாத வகையில் தடுப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப் பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்க ளுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியா வசிய பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களின் முதன்மை தொடர்பா ளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் என எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் அனைவருக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு வரு கிறது என தெரிவித்தார்.

;