tamilnadu

img

ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கக் கூடாது... மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை....

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஜூலை 31க்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கக் கூடாது, ஆலையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள்மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன்பற்றாக்குறை இல்லாத நிலையில் தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட ஜூலை 31-ம் தேதியைகடந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கக் கூடாது.முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி ஸ்டெர்லைட் நிர்வாகம் நிரந்தரமாக அகற்றிட வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து அரசு பணி கிடைக்காது விடுபட்டவர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கிட வேண்டும். போராட்டத் தில் படுகொலையுண்ட 15 தியாகிகளின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;