tamilnadu

img

ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைக்க வேண்டும்.. தூத்துக்குடியில் உ.வாசுகி பேட்டி...

தூத்துக்குடி:

தூத்துக்குடியில்  வெள்ளியன்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நாடு முழுவதும் இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. தற்போது ஆக்சிஜன் அளவு தமிழகத்தில் தேவையான அளவு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி பழைய படி மீண்டும்  மூடி சீல் வைக்க வேண்டும் என்பது எங்களது கருத்து. கர்நாடக மாநிலத்தில் இருப்பது பாஜக அரசு. மத்தியில் இருப்பதும் பாஜக அரசு. எனவே அவர்கள்அகில இந்திய தலைமையிடம் மேகதாது அணைகுறித்து கூற முடியும். ஆனால் அவர்கள் கர்நாடகாவில்இதை வைத்து ஒரு அரசியல். தமிழகத்தில் இதை வைத்து ஒரு அரசியல். அதேபோல் மத்தியில்,ஆணையமே இதற்கான முழு தீர்வு அளிக்கும் என பட்டும் படாதது போல் கூறி  ஒரு அரசியல். எனவே மூன்று முகங்கள் கொண்ட அரசாங்கமாகவேஒன்றிய பாஜக அரசாங்கம் உள்ளது. தமிழகத்தில்அனைத்துகட்சிகளும் அனைத்து மக்களும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்த்துள்ளநிலையில் அதுகுறித்து சட்டரீதியாக போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

;