tamilnadu

img

‘தேசம் காப்போம்’ - மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

புதுக்கோட்டை, ஆக.28-  மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்தும், ஏழைகளுக்கான வாழ்வாதா ரக் கோரிக்கைகளை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தின் பல்வேறு இடங்க ளில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், வம்பன் நால்ரோடு, திருவரங்குளம் கேப்பரை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்றது. ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவ ட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றி யச் செயலாளர் எல்.வடிவேல் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பேசினர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நாகை நகரச்  செயலாளர் சு.மணி தலைமையில் நடந்த இய க்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்தி ரபோஸ், சொ.கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.குணசேக ரன் ஜி.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழ்வேளூர் ஒன்றியம், ஆதமங்கலம் மற்றும் சில  பகுதிகளில் நடந்த இயக்கத்திற்கு ஒன்றியச் செய லாளர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.எம்.அபுபக்கர், எம்.என்.அம்பிகாபதி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கீழையூர் ஒன்றியத்தில் பாலக்குறிச்சி, சோழ வித்தியாபுரம், கீழையூர் பகுதிகளில் கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், கே. சித்தார்த்தன் தலைமையில் மக்கள் சந்திப்பு  இயக்கம் நடைபெற்றது. நாகை ஒன்றியம், ஆவ ராணி, புதுச்சேரி, ஒரத்தூர், ஆலங்குடி பகுதிக ளில் நடந்த கூட்டங்களுக்கு ஒன்றியச் செயலாளர்  பி.டி.பகு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

குடவாசல்

நன்னிலம் ஒன்றியம் முழுவதும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன், மாவ ட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்ட  கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் தலைமை ஏற்று கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா பழூர் ஒன்றியம் உதயநத்தம் கிராமத்தில் கட்சி கிளை செயலாளர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி  வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். இளங்கோ வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

;