tamilnadu

img

விஏஓ கொலை வழக்கில் புதிய அதிகாரி நியமனம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓ  லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சுரேஷ் நியமனம்


தூத்துக்குடி அருகே உள்ள முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணியாற்றி வந்தார் இவர் அந்த பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாகப் புகார் அளித்ததன் காரணமாகக் கடந்த 26-ம் தேதி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தே இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது இந்த கொலை தொடர்பாக ராமசுப்பு,மாரிமுத்து என்ற இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் முறப்பநாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜமால் மற்றும் உதவி ஆய்வாளர் அந்தோணி ராஜ் மற்றும் காவலர் மகாலிங்கம் ஆகியோருக்கு தொடர்பு  இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தி  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் அய்கோ என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்-யிடம் நேற்று  முன் தினம் மனு அளித்தனர் இந்த நிலையில் தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி சுரேஷ் என்பவரை  நியமனம் செய்து தென்மண்டல ஐ.ஜி அஷ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

;