tamilnadu

ஸ்டெர்லைட் குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் கீதாஜீவன் எம்எல்ஏ பேட்டி

தூத்துக்குடி,ஆக.18- “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் வந்தனர். அவர்களை டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பட்டாசு வெடிக்க கூடாது என்று தடுத்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய கீதாஜீவன் எம்எல்ஏ, பின்னர் செய்தியாளர்களிடம் “கூறும் போது, ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான மக்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. இதன் பின்னராவது இந்த ஆலை யை மூடுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தூத்துக் குடியில் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். ஆனால் திமுகவினருக்கு மட்டும் காவல்துறை தடை விதிக்கிறது. பட்டாசு வெடித்தது தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந் தால் அதனை திமுக எதிர்கொள்ளும் என்றார். இதனிடையே திமுகவினர் தடையை மீறி பட்டாசு வெடித்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக 
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி யில் சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டா டினர்.

;