tamilnadu

img

தெலுங்கானா போல பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றுக!

தூத்துக்குடி:
தெலுங்கானா மாநில அரசைப் போல புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க 32 வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் செவ்வாய், புதன்கிழமைகளில்  நடைபெற்ற மாநாட்டில்மாநிலத் தலைவராக செந்தில், பொதுச்செயலாளராக கனகராஜ், பொருளாளராக ரவி, துணைப் பொதுச் செயலாளர்களாக குமாரர், முருகேசன், சுதர்சிங், டென்னிஸ் ஆன்டல், உதவிதலைவர்களாக ரைமண்ட், நடராஜன், கண்ணன், முத்துவேல், கோதண்டபாணி, முருகேசன், ஓம்பிரகாஷ், செல்லப்பன், கருப்பசாமி, ஜெயராமன், ஷேர்கான், வெங்கடேசன், அருண்,ஜான் ராஜன், உதவிச் செயலாளராக செல்லதுரை, அசோக், பிச்சைமணி, பொன்ராஜ், சரவணன், முருகேசன், முத்துப்பாண்டி, பாஸ்கர், அருள்தாஸ், பார்த்தசாரதி, செந்தில் குமார், செந்தில், சடகோபன், ஏசுதாஸ், ஆரோக்கிய ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள் 
தொழில் நுட்ப பிரிவில் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமனம் செய்திடவேண்டும். 12(3) ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டநார்ம்ஸ்படி பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இதர பிரிவினருக்கு வழங்கப்படுவதைப் போல சீரான பதவி உயர்வினை வழங்கிட வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை பாக்கியில்லாமல் உடனேவழங்க வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் உடனடியாக காலியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெற்றோரை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும். விடுப்பு வழங்க மறுத்து ஆப்சென்ட் போட்டுசம்பளம் பிடிக்கிற மோசமானநடவடிக்கையை கைவிட வேண்டும். பணியின் போதுஉயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின்படி ஊழியர்களின் வாரிசுகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து தெலுங்கானா அரசைப்போல தமிழக அரசும் பழைய பென்சனை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்களை நிறைவேற்றவேண்டும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் மாநாடு வலியுறுத்தியுள்ளது.
 

;