விளாத்திகுளம், அக்.23- விளாத்திகுளம் தாலுகா புதூர் ஊராட்சி ஒன்றியம் மாதலப்புரம் முதல் கந்தசாமிபுரம் வரையிலான சாலைப் பணி எஸ்சிபிஎஆர் 2018-19 திட்டத்தின் கீழ் 5 கிமீ தூரத்திற்கு ரூபாய் 129.05 லட்சம் மதிப்பீட்டில் 4/3/2019 அன்று துவங்கி கடந்த 7 மாத காலமாக நடந்து வருகிறது. இதுவரை ஒரே ஒரு முறை ஜல்லி விரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜல்லி கற்கள் அடிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாலும் சாலையின் அகலம் குறைக்கப்பட்டதா லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் சாலையின் அகலம் குறைத்து போடப்படுவதால் இரண்டு இரு சக்கர வாகனங்கள் விலகுவது கூட சிரமமாக உள்ளது. இதனால் விளாத்தி குளம்-கந்தசாமிபுரம் செல்லும் பேருந்து மாதலப்புரத்துடன் நிறுத்தப்படுகிறது. இதனால் கந்தசாமி புரம்,பி.ஜெகவீரபும்,புதுச்சின்னையாபுரம்,சேர்வைக்காரன்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 4 கிமீ தூரம் நடந்து சென்று மாதலப்புரம் அல்லது பூதலப்புரம் ஆகிய ஊர்களில் சென்று பஸ் ஏற வேண்டிய அவலம் உள்ளது. உடனடியாக பணிகளை துவங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாத நிலையில் சுவரொட்டி ஒட்டப்பட்டும் உள்ளது. எனவே தீபாவளிக்கு முன்பாக சாலை யில் ஜல்லி விரித்து பஸ் போக்கு வரத்தை துவக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம். இல்லாத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை. மறியல் போராட்டம் நடத்தப்படும் என தாலுகா செயலாளர் புவிராஜ் தெரிவித்துள்ளார்.