tamilnadu

சென்னை மற்றும் திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

களப்பணியாளர்களுக்கு  2  மாத  ஊதிய  நிலுவையை  உடனே  வழங்க  வேண்டும்

மாநகராட்சி ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஆக. 28 - களப்பணியாளர்ளுக்கு வழங்கப்  படாமல் உள்ள 2 மாத ஊதியத்தை சென்னை மாநகராட்சி உடனடியாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநக ராட்சி ஆணையருக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கை யில் சுமார் 13 ஆயிரம் களப் பணி யாளர்களை சென்னை மாநகராட்சி ஈடுபடுத்தி வருகிறது. இவர்களில் பெரும்பகுதியினருக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. களப்  பணியாளர் ஒவ்வொருவரும் தின மும் 5 முதல் 10 தெருக்களில் வீடு  வீடாக சென்று ஆய்வு நடத்த  வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட வர்களை கண்டறிதல், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல், அவர்களை தினசரி  3 முறை தொடர்பு கொண்டு, தேவை யான உதவிகளை செய்தல், மருந்து வழங்குதல், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் என களப் பணியாளர்கள் பணி யாற்றுகின்றனர். இந்த களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி 89 நாட்கள் மட்டுமே  நேரடியாக சம்பளம் கொடுத்துள் ளது. அதன்பிறகு அவர்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் ஊழியர்களாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு தன்னார் வத் தொண்டு நிறுவனமும் 20 களப்  பணியாளர்களுக்கு மிகாமல் வைத்துள்ளதாக தகவல் வருகின்  றன. அதற்கு மேற்பட்ட ஊழியர்கள்  பணி புரிந்தால் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி மற்றும் இன்சூரன்ஸ் போன்றவை வழங்க வேண்டும். இதனை மறுக்கவே மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய நடவ டிக்கையை எடுத்துள்ளது. தற்போது, எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன? இவர்க ளின் கீழ் எவ்வளவு ஊழியர்கள் இருக்கின்றனர் என்பன போன்ற விப ரங்களை மாநகராட்சி அறிவிக்க வேண்டும். தொற்று எவ்வளவு நாட்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசுக்கே தெரியாதபோது பேரிடர் காலத்தில் பணியாற்ற வந்திருக்கும் களப்பணியாளர்களை தொடர்ந்து பணிபுரிய உரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். குழு காப்பீடு 2 மாதமாக வழங்காத சம்ப ளத்தை உடனே வழங்குவதோடு, பாதுகாப்பு உடை உபகரணங்கள் கொடுக்க வேண்டும். பணிக் காலத்  தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு அறிவித்த நிவாரணம் பெறுவ தற்கு ஏற்ற வகையில் இவர்களை குழு காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். வலதுசாரி அரசியல் சார்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனங் களை மட்டும் இப்பணியில் ஈடுபடுத்தி யுள்ளதாக வரும் குற்றச்சாட்டுக்கு  மாநகராட்சி நிர்வாகம் உரிய விளக்  கம் அளிக்க வேண்டும். மாநகராட்சி  நிர்வாகம் வெளிப்படைத் தன்மை யோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

செய்தித் துளிகள்

புதுச்சேரி தொற்று 13,024

புதுச்சேரியில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,024ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 199ஆக உயர்ந்துள்ளது.

திடீர் உயிழப்பு

பாகூர் அருகே மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அரசு பள்ளி ஆசிரியை  சிவசங்கரி (35) இறந்து போனார்.

கொரோனா பலி

பாகூர் வட்டாட்சியர் அலுவலக  பல்நோக்கு ஊழியர் செங்கதிர் (41) கொரோனா தொற்றுக்கு இறந்து போனார். அவர் பலியானது மற்ற ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீல்

திருப்பத்தூரில் அரசு அனுமதியின்றி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கைது

வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மஸ்தான் (38)  என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த ஒன்னேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



 


 

சிறுமி வன்கொடுமை: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

முகக்கவசம் அணியாததை கேட்ட செவிலியர் மீது தாக்குதல்

;