tamilnadu

விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

 தூத்துக்குடி, மே 21- தூத்துக்குடிமாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலர் விடுத்துள்ள பத்திரிகை செய்தி வரு மாறு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2018-19ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் (இந் திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழு மம் நடத்திய போட்டிகள் தவிர்த்து) கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட தொகை வழங்கப்படவுள்ளது.  அவை முறையே தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6000மும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4000-மும், வெண்கலப் பதக்கம் வென்ற வர்களுக்கு ரூ.2000மும் வழங்கப்பட வுள்ளது. எனவே 2018-19ம் ஆண்டு தேசிய அள விலான போட்டிகளில், அதாவது 1.4. 2018 லிருந்து 31.03.2019 வரையிலான காலத்தில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவர்களது விளை யாட்டு சான்றிதழ் மற்றும் புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டையின் நகல்களை இம்மாத இறுதிக்குள் கீழ்க்கண்ட இவ்வலுவலக முகவரிக்கு அலுவலக நேரத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்து ககுடி மாவட்டப் பிரிவு, மாவட்ட விளை யாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001, தொலைபேசி எண். 0461 2321149