tamilnadu

img

ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ3000 வரை அதிகரித்துள்ளது. இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.640 உயர்ந்து ரூ.29440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து 3680க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் ஆபரணத்தங்கம் விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொட்டு விடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.