tamilnadu

img

அறிவியல் சமூகமாகக் கேரளத்தை மாற்றுவோம்

பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்

கேரள வரலாற்றில் குறைந்த காலத்தில் இந்த அளவுக்கு மாற்றங்களைச் சாதித்துக் காட்டிய ஒரு அரசை இதற்குமுன் நாம் கண்டதில்லை. அனைத்துத் துறைகளிலும் மிகச்சிறந்த மாற்றங்களை இந்த அரசால் உருவாக்க முடிந்தது. 2019 ஜனவரி முதலான இந்த அரசின் மிக முக்கியமான சாதனைகளை இங்கே விவரிக்க விரும்புகிறேன். ஆரம்பம் முதல் இறுதிவரை சவால்கள் நிறைந்த ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்கிறது. பொது அரசியல் நிகழ்வுகளுடன் இயற்கையும் தனது சீற்றத்தைக் காட்டிய மற்றொரு வருடமாக இருந்தது 2019. அது, இந்த சவால்களையெல்லாம் சிறந்த நிர்வாகத் திறமையுடனும் மன உறுதியுடனும் கடந்து சென்றதையே நாம் கண்டோம். கடந்த ஆண்டு பெருவெள்ளப் பிரளயத்தின் பேராபத்தில் இருந்து கரையேறி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதற்கிடையேதான் மீண்டும் ஒரு பிரளயம் வந்தது. இதற்கிடையே நிபா வைரஸ் பீதியும்  மாநிலத்தில் எழுந்தபோது நாம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.  பெருவெள்ளப் பிரளயத்தின்போது மகத்தான கூட்டுப்பலத்தில் நாம் மீண்டெழுந்தோம். அதன் நினைவோடுதான் இந்தப் புத்தாண்டைத் துவக்கியுள்ளோம். புதிய சிந்தனைகளும் புதிய காலத்திற்கு ஏற்ற வளர்ச்சிகளும் கேரளத்திற்குக் கொண்டுவர அரசு தீர்மானித்ததன் பகுதியாகத்தான் ஒன்றிணைந்த எரிபொருள் மையம் திருவனந்தபுரத்தில் ஆனயறயில் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கேரளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் முதலிடத்திற்குக் கொண்டுவரவும், மிகச் சிறந்த கல்வித்திறன் பெற்ற கேரள இளைஞர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், சிறந்த தொழில்முனைவோராக ஆக்கவும் அரசு லட்சியமிட்டுள்ளது. ஜனவரி மத்தியில் துவக்கிவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் வணிக வளாகத்தையும், மேக்கர் வில்லேஜையும் வருடக் கணக்கில் மெதுமெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற திட்டங்களையும் விரைவுப்படுத்தி நிறைவு செய்வதை இந்தஅரசு லட்சியமாகக் கொண்டுள்ளது. கொல்லம் பைபாஸ் திட்டத்தை நிறைவேற்றியது இதற்குச் சான்றாகும். தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்குக் காத்திருக்க முடியாது என்பதால் மாநிலம் நிதி ஒதுக்கவும் தயாராக உள்ளது என்ற கொள்கையும் இங்கே செயல்படுத்தப்பட்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்துறை நிறுவனமாகிய திருவிதாங்கூர் கொச்சி மெடிக்கல்ஸ் லிமிடெட் லாபத்தில் இயங்கிய செய்தி ஜனவரியில் கிடைத்தது. இந்த அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க உறுதியேற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மூன்று ஆண்டுகளுக்கிடையே ஒரு லட்சத்திற்கு மேல் பட்டா வழங்கினோம் என்பது கவனத்திற்குரியது. கால் நூற்றாண்டிற்குப் பிறகு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சொந்த வருமானத்திலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. படிப்படியாகப் பொதுத்துறை நிறுவனமான கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தைத் தன்னிறைவு பெறச் செய்வதற்கான முயற்சிகள் உறுதியானதாகும். கேரளம் எதிர்கொள்கிற புதுவிதமான சவால்களைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்தவர்கள் என்கிற நிலையில் கடந்த ஆண்டுகள் கடந்துபோயின. பிப்ரவரியில் முதலாவதுகட்டத் துவக்கம் முடிவுற்ற இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு வைராலஜி ஒரு புதிய தொடக்கமாகும். அன்னிய முதலீடுகளைக் கவர்கிற விசயத்தில் கேரளம் புதிய தோற்றத்தைப் பெற்றது. பிப்ரவரியில் ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுடன் சேர்த்தலா இன்ஃபோபார்க்கில் டாட் செனட்டர் நிறுவுவதற்காக ராக் வங்கியுடன் உடன்பாடு செய்துகொண்டது ஐ.டி.துறை நடத்திய ஃபயூச்சர் டிஜிட்டல் இந்தியா உச்சிமாநாட்டின் வெற்றியாகும். கொச்சியில் பெட்ரோ கெமிக்கல் காம்பளக்ஸில் யு.ஏ.இ. என்ற தேசிய நிறுவனமாகிய அட்னோக் முதலீட்டிற்கு விருப்பம் தெரிவித்தது முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் வெற்றியாகும். விருந்தினராகக் கருதப்படும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்புத் துறை நடைமுறைப்படுத்திய இன்சூரன்ஸ் திட்டமாகிய ஆவாஸும், பிப்ரவரியில் துவக்கிய குடியிருப்புத் திட்டமாகிய அப்னாகரும் சகோதரக் குடிமக்கள் மீதான அக்கறையைக் காட்டுகின்றன.

புதிய முழுமையான சமூக சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடு உருவாக்குவதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் காரூண்ய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்தது. பெருவெள்ள பிரளயத்தில் சிக்கிய விவசாயிகளுக்கு ஆதரவாக வங்கிக் கடனுக்கு டிசம்பர் 6 வரை விவசாயக் கடன்களுக்கு மொரட்டோரியம் அறிவிக்கப்பட்டது. கேரளம் நாடாளுமன்றத் தேர்தல் சூட்டில் இருந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சிறந்த திட்டங்களுடன் நிறைந்து நின்றது. டிரான்ஸ்க்ரிட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் கிஃப்பில் இருந்த ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பதினான்கு திட்டங்களில் ஒன்பது திட்டங்கள் ஏப்ரல் மாதத்திலேயே துவக்கப்பட்டது. நெல் உற்பத்தி முந்தைய ஆண்டுகளைவிட 80 ஆயிரம் டன் அதிகம் விளைவிக்கப்பட்டது. 
மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மறுசீரமைப்பு மாநாட்டின் ப்ளீனரின் அமர்வில் கேரளத்தின் பெருவெள்ளப் பிரளயப் பாதிப்பின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப்பற்றி முதலமைச்சர் உரையாற்றினார். கிஃப்பியின் மஸாலாபோண்டு லண்டன் ஸ்டாக் மார்க்கெட்டிற்குக் கொண்டு செல்வது சம்பந்தப்பட்ட மார்க்கெட் துவக்கவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு முதலமைச்சரைத் தேடிவந்தது. ரீபில்டு கேரள டெவலெப்மென்ட் ப்ரோக்ராமின் நகலை அமைச்சரவை ஏற்றுக் கொண்டதும் மே மாத இறுதியில்தான். 
 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் மூலம் இந்த அரசின் மதிப்பு உயர்ந்தது. சரியான இடைவேளைகளில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலிப்பதற்கு மக்களுக்கான வளர்ச்சி அறிக்கை தயார் செய்து வெளிட்டது ஒரு புதுமையான விசயமாகும். ஜூன் 10-ல் தேர்தல் காரணத்தால் மாற்றிவைக்கப்பட்ட வளர்ச்சி அறிக்கை வெளியிட்ட சமயத்தில் தேர்தல் அறிக்கையில் உள்ள 600 இனங்களில் 540-லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். கேரள ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட்டின் எலெக்ட்ரிக் ஆட்டோவைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் பேருந்தும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது ஜூன் கடைசி வாரத்திலாகும். கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பதற்காக ஸ்விஸ் நிறுவனமான ஹெஸ்ட்டுடன் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் வாகனத்துறையை மிஞ்சுமென்று கருதப்படுகிற இ-வெஹிகில் துறையில் கேரளம் நல்லமுன்னேற்றம் காணுகிறது.  ஜூலை ஆரம்பத்தில் கேரள ஆட்டோமொபைல் லிமிடெட் ஃபாக்டரியில் இ-ஆட்டோ தொழில் அடிப்படையிலான உற்பத்தி துவக்கப்பட்டது. மாநிலத்தில் ஒன்பதாயிரம் வரையான லோயர் பிரைமரி ஸ்கூல்களில் ஹைடெக் லேபுகள் ஏற்பாடு செய்ததன் துவக்கமும் ஜூலை மாதம் நடைபெற்றது. ரீபில்டு டெவலெப்மென்ட் இன்ஸியேட்டிவின் சார்பில் நடைபெற்ற டெவலெப்மென்ட் பார்ட்டிஸிப்பன்ஸ் கான்க்ளேவ் ஜூலை மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பெருவெள்ளப் பிரளய மறுசீரமைப்பும் பணியுடன் ஒத்துழைப்பதற்கு உலக வங்கி, ஜெர்மன் வங்கி, ஜிக்கா முதலான பல சர்வதேச ஏஜென்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.  மாநிலத்தில் இரண்டாயிரம் பொது இடங்களில் இலவச வை-ஃபை வழங்குகிற கே - ஃபை திட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது ஜூலை மாதம் இறுதியில் நடைபெற்ற முக்கியமான அறிவிப்பாக இருந்தது.

கடந்த முறை ஏற்பட்ட பெருவெள்ளப் பிரளயத்தின் ஓராண்டு நெருங்குகிற இந்த சந்தர்ப்பத்தில்தான் மீண்டுமொரு பெருவெள்ளப் பிரளயமும் இயற்கைச் சீற்றமுமாக கேரளத்தைப் பாதித்த மாதமாக ஆகஸ்ட் மாதம் இருந்தது . துயர்துடைப்பு நிவாரண நடவடிக்கைகளை சிறப்பாகச் செயல்படுத்த முடிந்தது ஒரு வெற்றியாக இருந்ததென்றாலும் நிலச்சரிவு விபத்துகளில் ஏராளமான உயிர்களை இழந்த நிகழ்வென்பது நமது துயர்துடைப்பு நிவாரண நடவடிக்கைகளை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது. பெருவெள்ளப் பிரளய மறுசீரமைப்புப் பணியுடன் அரசு முன்னோக்கிச் செல்லும் வேளையில்தான் இரண்டாவது பெருவெள்ளப் பிரளயம் மாநிலத்தைப் பாதித்தது. என்றாலும், முன்பு நிச்சயித்தபடி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றதன் விளைவாக எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திலேயே லைஃப், கெயர்ஹோம், ரீபில்டு முதலான பல்வேறு திட்டங்களில் உட்படுத்தி வழங்கிய 500 வீடுகள் சான்றாக விளங்குகின்றன. பெண் ஆளுமையிலும் பாலின சமத்துவத்திலும் புதிய சுவடுபதித்து அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பெண் டிரைவர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்தது. ஆண்டுக் கணக்கில் முடங்கிக் கிடந்த ஓர் அடிப்படை வசதி வளர்ச்சித் திட்டமாகிய புனலூர்-மூவாற்றுபுழா நெடுஞ்சாலையின் கோன்னி-ரான்னி-ப்லாச்சேரி நிர்மாணப்பணி துவக்கப்பட்டது. சமூகச் சீர்திருத்தவாதியும் மறுமலர்ச்சி நாயகனுமான மகாத்மா அய்யங்காளியைப் போற்றும் விதத்தில் திருவனந்தபுரம் விக்டோரியா ஜூப்ளி ஹாலுக்கு மகாத்மா அய்யங்காளியின் பெயரைச் சூட்டியதும் ஆகஸ்ட் மாதம் அரசு மேற்கொண்ட ஒரு முக்கியமான தீர்மானமாகும்.
 

வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற விசயத்தில் அரசு அக்கறை செலுத்துகிறது என்பதன் சான்றுதான் கொச்சி மெட்ரோவின் மகாராஜாஸ் முதல் தைக்கூடம் வரையான மெட்ரோ பாதை காலத்திற்கேற்றபடி பணியை நிறைவு செய்து செப்டம்பர் மாதம் துவக்கத்தில் மாநிலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. சாத்தியமில்லாதது எனக்கருதி கைவிட முன்வந்த திட்டங்களைக்கூட செய்து முடிக்கிற அரசின் செயல்திறனுக்கு மற்றுமொரு சான்றுதான் செப்டம்பர் மாத இறுதியில் துவக்கப்பட்ட இடமண்-கொச்சி 440 கிலோ வாட் பவர் ஹைவே. பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதும் அவற்றைப் பொதுத்துறையிலேயே நிலைநிறுத்துவதும் அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும். மாநில அரசு செயல்படுத்துகிற வளர்ச்சிப் பணிகளுக்கு அங்கீகாரம் என்று கருதத்தக்க மத்திய அரசின் மிக முக்கியமான தீர்மானமாகும் தொழில் வளர்ச்சிக்கான சென்னை-பெங்களூரு இணைப்புச் சாலையைக் கோயம்புத்தூர் வழியாகக் கொச்சி வரை நீட்டித்தது. கேரளத் தொழில் வளர்ச்சிக்கு இது உதவிகரமாக இருக்கும். செப்டம்பர் மாத இறுதியில்தான் நீதி ஆயோக்கின் ஆய்வில் கேரளத்தின் பொதுக்கல்வி நாட்டிலேயே முதலிடம் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. முழுமையான ட்ராமா கேர் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் 300 ஆம்புலன்ஸ்கள் இந்த கால அளவில் இயக்கப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி மேலும் தாமதப்படுவது நமது எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்குத் தேவையான இடம் கையகப்படுத்துவதில் 25 சதவீதம் மாநில அரசு பொறுப்பேற்கலாம் என்ற உடன்படிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் அக்டோபர் மாதம் கையெழுத்தானது. 

அக்டோபர் மாதத்தில் கேரள வங்கி என்ற நீண்டகால கனவுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தது. தேசிய ஊட்டச்சத்து உணவுக் குறியீட்டிலும், நீதிமன்றங்களுக்கான அடிப்படை வசதி வளர்ச்சியிலும் கேரளம் முதலாவது இடம் என்று நாட்டின் பல்வேறு ஏஜென்சிகளின் அறிக்கைகள் வந்ததும் இந்த மாதத்தில்தான். 2021 டிசம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ள சூரியசக்தி மூலமாகக் கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்குத்  துவக்கமிடப்பட்டது. கனவுத் திட்டமாகிய கே-ஃபோன் திட்டம் 2020-ல் பூர்த்தியாகும் என்ற அறிவிப்புதான் டிசம்பர் மாதத்தின் மிக முக்கியமான அறிவிப்பு. 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அதிவேக இன்டர்நெட் என்பதுடன், கேரளம் முழுவதும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு இது உதவும். கேரளம் உருவான தினத்தில் கேரளத்தின் இளைஞர்கள் காத்திருந்த அந்தத் தீர்மானம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டு, மாநிலத்தில் கே.ஏ.எஸ். திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. மாநில அரசு நிர்வாகப் பாரம்பரியத்திற்குப் புது ரத்தமும் சக்தியும் பாய்ச்சுவதற்கு இதன் மூலம் முடியுமென்று நம்புகிறோம். பொதுத்துறை நிறுவனமாகிய கேரள ஆட்டோ மொபைல் லிமிடெட் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோ-நீம்ஜி நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்தது. கனவுத் திட்டமாகிய கூடங்குளம்- இடமண் பவர் ஹைவேயின் அதிகாரப்பூர்வத் துவக்கமும் இந்த மாதத்தில்தான் நடைபெற்றது. 

மாநிலத்தில் மேலும் 13 குடும்ப சுகாதார மையங்களுக்கு நேஷனல் குவாலிட்டி அஷ்வரன்ஸின் (என்க்யூஏஎஸ்) அங்கீகாரம் கிடைத்தது. இதையும் சேர்த்து 55 அரசு மருத்துவமனைகளுக்கு என்க்யூஏஎஸ் அங்கீகாரம் கிடைத்தது. நவம்பர் மாதம் 3 முக்கியமான அங்கீகாரங்கள் மாநிலத்திற்குக் கிடைத்தன. நாட்டிலேயே மிகச் சிறந்த புலிகள் சரணாலயம், மிகச் சிறந்த மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திய மாநிலம் என்பதற்கான தேசிய அங்கீகாரம் கிடைத்தது. ஸ்டாக்ஹோமைத் தலைமையிடமாகக் கொண்ட ஆய்வு நிறுவுனமாகிய யூபிஐ க்ளோபல் நடத்திய வேர்ல்டு பெஞ்ச்மார்க் ஸ்டடீஸ் ஆய்வில் சர்வதேச அளவில் மிகச் சிறந்த பொதுத்துறை வர்த்தகம் அதிகரித்ததற்கான முதலாவது இடம் கேரள ஸ்டார்ட்அப் மிஷனுக்குக் கிடைத்ததும் நவம்பர் மாதம்தான். வரும் நாட்களில் கேரளம் எதிர்பார்த்திருக்கிற சாதனைகளும் முக்கிய நடவடிக்கைகளும் ஏராளம் உள்ளன. டிசம்பர் மாதத்தில் லைஃப் திட்டம் மூலமாக வீடு கிடைத்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாகும். சரியான இடைவேளைகளில் தடையின்றி சமூகப் பாதுகாப்புப் பென்சன் அரசு வழங்கியதும் கவனிக்கத்தக்கதே. மாநிலத்தின் மற்றொரு கனவுத் திட்டமாகிய ஸெமி ஹைஸ்பீடு ரயில்வே லைனுக்குத் தேவையான நிதியைக் கண்டறிந்து இடம் கையகப்படுத்துவதற்கு அடுத்த ஆண்டிலேயே முடியுமா என்பதும், மற்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுமான பொறுப்புகளும் நமக்குக் காத்திருக்கின்றன. புத்தாண்டு துவங்கும்போது கேரளத்தின் சொந்த லேப்டாப் ஆன கொக்கோனிக்ஸ் விற்பனைக்கு வரும் என்பதும் அனைவரும் உற்றுநோக்கும் ஒரு முன்னேற்றமாகும். 

 

;