tamilnadu

img

பிட்காயின் தடை குறித்த புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டம்

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் வைத்திருந்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் டிஜிட்டல் வடிவில் உள்ள நாணயங்கள். இந்த கரன்சிகள் கம்ப்யூட்டர்கள், இதற்கான ஏடிஎம்கள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பிட்காயின் போன்று ஏராளமான கிரிப்டோ கரன்சிகள் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இந்தியாவில், இந்த டிஜிட்டல் நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கான தடை மற்றும் முறைப்படுத்துதலுக்கான புதிய மசோதா - 2019, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த சட்ட விரோதமாக இந்த கரன்சி பிரச்சனையால் கைது செய்யப்பட்டால், ஜாமீனில் வெளிவர முடியாது இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டால், பிட்காயின் வைத்திருப்பவர்கள் தங்களிடம் எவ்வளவு மதிப்பிலான கரன்சி உள்ளது என 90 நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றன.