tamilnadu

img

திருவில்லிபுத்தூரில் பக்தர்களின்றி ஆடிப்பூரத் தேரோட்டம்

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தக் கோவிலில் தமிழக அரசின் முத்திரைசின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது ஆண்டாள்கோவில் தேரோட்டம் நடைபெறும். அன்றையதினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர்விடுமுறை அளிக்கப்படுவதுடன்  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுப்பார்கள். இந்தாண்டு ஆடிப்பூரத் திருவிழா கடந்த 16-ம் ஆம் தேமதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மாட வீதிகள் வழியாக நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே சிறிய தங்க தேர் இழுக்க அறநிலையத் துறை அனுமதி அளித்தது. அதன்படி ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் கோவில் வளாகத்தில் வெள்ளியன்று காலை நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் வடத்தை பிடித்து இழுத்து  துவக்கிவைத்தனர்.சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, சடகோப ராமானுஜ ஜீயர், தென் மண்டல ஐஜி முருகன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா‌.கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;