tamilnadu

உலக தாய்மொழி தின நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, பிப்.22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்  திருத்துறைப்பூண்டி கிளை சார்பில் உலக தாய்மொழி தினம் திருத்துறைப்பூண்டி ஓய்வூதியர் சங்க கூட்ட அரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் வழக்கறி ஞர் வி.வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைச் செய லாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கவி ஞர்கள் மா.சண்முகம், ஜோசப்ராஜ் கவிதை வாசித்தனர். அழக ரசன் நகைச்சுவை உரையாற்றினார். கிழக்கு வாசல் உதயம்  ஆசிரியர் எழுத்தாளர் உத்தமசோழன் அம்மா என்னும் தலை ப்பில் கதை சொல்ல,  தாய்மொழி போற்றுதும், தலைப்பில்  கவிஞர் புரட்சிதாசனும், தமிழும் பண்பாடும் தலைப்பில் வழ க்கறிஞர் கதாக அரசு தாயுமானவனும் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் எழுதிய ‘கிராமத்தை நோக்கி’ என்னும் நூலை அறிமுகப்படுத்தி சிவப்பு புத்தக  நாளில் மார்க்சிய சிந்தனையாளர் கே.ஜி.ரகுராமன் ஆய்வுரை  வழங்கினார். தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது. தமுஎ கச பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் தி.தமி ழ்ச்செல்வன் நன்றி உரையாற்றினார்.