tamilnadu

சொந்த ஊருக்கு வர வசதியின்றி அவதிப்பட்ட கொரோனா நோயாளிகள் திருவாரூர் ஆட்சியர் கவனத்தில் கொள்வாரா?

குடவாசல், ஜூலை 26- கொரோனா மேல் சிகிச்சைக்காக சென்றவர்கள் சொந்த ஊருக்கு வரு வதற்கான வசதியில்லாமல், பல்வேறு இன்னல்களை கடந்து சொந்த ஊர் வந்துள்ளனர். குடவாசல் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்  அதிகமாக பரவி வருகிறது. சுகாதார மருத்துவ குழு சார்பாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களை பரிசோதனை செய்து பாசிட்டிவ் உள்ளவர்களை திரு வாரூர் மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகி ச்சைக்காக அனுப்பி வைக்கப்படு கின்றனர்.  மேல் சிகிச்சைக்கு செல்பவர்க ளுக்கு தற்போது நடைமுறைப்படி ஒரு  வார காலத்தில் அல்லது பத்து நாட்களிலேயே கொரோனா சிகிச்சை அளித்து பின் அவர்களுக்கு நெக ட்டிவ் ரிசல்ட் வந்த பின், வீட்டுக்கு சென்று  தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படு கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் குடவா சலில் உள்ள மாரியம்மன் கோவில்  செல்லும் வழியில் உள்ள குச்சிபாளை யம் தெருவில் இருந்து கொரோனா மேல்  சிகிச்சைக்காக சென்றவர்கள், ஒரு வார சிகிச்சைக்கு பின் நெகடிவ் என்று  ரிசல்ட் வந்ததையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா சிகிச்சை எடுத்து கொண்டவர்கள், பேருந்து வசதி இல்லா ததால் நாகை சாலையில் உள்ள அரசு  கல்லூரி முகாமில் இருந்து நடந்து வந்து ள்ளனர். ஊருக்கு வர பணம் இல்லா ததால், அருகில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி வாடகைக்கு ஆட்டோ எடுத்து வந்துள்ளனர். இந்த அவல நிலை சிகிச்சை பெற்ற  நோயாளிகளுக்கு மன உளைச்சலை உண்டாக்குகிறது. ஆகவே முன்னி ருந்த நடவடிக்கை போல் அரசு மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெற்ற  நபர்களை சிகிச்சை முடிந்த பின் அவர்கள் சொந்த ஊருக்கு அரசு செல விலேயே அனுப்ப வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடு த்துக் கொள்வாரா?

;