நல்லாசிரியர் விருது
திருத்துறைப்பூண்டி, செப்.11- அரசின் நல்லாசிரியர் விருதினை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, கொருக்கை நடுநிலைப்பள்ளி யில் பணியாற்றுகின்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினுடைய இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.என்.தங்கராசு உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். இந்த பள்ளி புயலில் மிகவும் சேதமடைந்திருந்தது. இந்த கட்டிடத்தினை கட்டுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பங்களிப்பு மிக முக்கியமானது. இதில் பணியாற்றுகிற ஆசிரியருக்கு விருது வழங்குவது என்பது கொருக்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
மனநல ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்
புதுக்கோட்டை, செப்.11- தற்கொலை தடுப்பிற்கு கட்டணமில்லா மன நல ஆலோ சனை சேவை எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். இது குறித்து ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தன்னைத்தானே காயப்படுத்தி கொள்ளுதல், வாழ்க்கையை பாரமாக வாழ்வதே வீண் என்ற எண்ணம், வெறுமையாக உணர்தல், தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம், கவலை ஆகிய எண்ணங்கள் இருந்தால் உடனடியாக 104 என்ற கட்ட ணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் உரிய மன நல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் தற்கொலை முயற்சி செய்து மீண்டு வந்த வர்களுக்கு மாதந்தோறும் 104 லில் இருந்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொடர்ச்சியான ஆலோசனை களை மேற்கண்ட எண்ணில் இருந்து வழங்குவார்;. பாதிக்கப்பட்டவர் எத்தகைய பிரச்சனைகளை கண்டறிந்து மனநல ஆலோசனை தொடர்ந்து 18 மாதங்களுக்கு இலவச மாக வழங்கப்படும். நேரடி மன நல ஆலோசனைகளுக்கு மன நல மருத்து வரை அணுகுவதுடன், புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் மன நோய்க்கான தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்ட மன நல மையத்தின் மூலம் 247 நபர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப் பட்டுள்ளதுடன், தேவையான நபர்களுக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோ சனைகளை பெற மாவட்ட அரசு மன நல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்தை 9486067686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.