தோழர் என்.துரைமணி காலமானார்
குடவாசல், ஆக.27- குடவாசல் ஒன்றி யத்தில் உள்ள அரச வனங்காடு கிராமம் புளிச்சகாடியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் ஒன்றியத் தலைவ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான என்.துரைமணி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக் குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் தோழர் துரைமணி ஆக.26 ஆம் தேதி காலை காலமானார். தோழரின் மறைவு செய்தி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, குடவாசல் ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர் எப். கெரக்கோரியா, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, செய லாளர் வி.எஸ்.கலியபெருமாள், குட வாசல் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி புளிச்சகா டியில் உள்ள அவரின் இல்லத்தில் வியா ழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர் மற்றும் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
தரங்கம்பாடி, ஆக.27- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மயி லாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர், கிடங்கல், இலுப் பூர் ஆக்கூர் பகுதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்களிடம் அம்பலப்படுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார நடைபெற்றது. திருக்கடையூரில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் கிளை செய லாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன், விவ சாயத் தொழிலாளர் சங்க வட்டத் தலை வர் பரமசிவம், வட்டக்குழு உறுப்பினர் தமிழ்வாசகம், இளையராஜா உரை யாற்றினர். கிடங்கல் கடைவீதியில் வீ.எம்.சரவ ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, குணசேகர், கிளை செய லாளர் சந்திரகாசு உரையாற்றினர். இலுப் பூரில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பி.சீனிவாசன் உரையாற்றினார். ஆக்கூ ரில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந் திரன், கே.பி.மார்க்ஸ், கிளைச் செய லாளர் சிவசுப்ரமணியன் பேசினர்.
நகராட்சி அலுவலகம் மூடல்
அரியலூர், ஆக.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் நகராட்சி ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து நகராட்சி அலு வலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு மூடப்பட்டது. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடைவீதி யில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தனிமனித இடைவெளி இன்றி கடை களில் பொருட்கள் வாங்க கூட்டமாக காத்திருக்கின்றனர், இதனைக் கண்டும் காணாமல் நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதனால் ஜெயங்கொண்டம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
எல்ஐசி முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.27- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க ஸ்ரீரங்கம் கிளை சார்பில் ஸ்ரீரங்கத்தில் எல்ஐசி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலை வர் கண்ணையன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி செயலாளர் சின்னசாமி, பொருளாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ராம் குமார், ஆண்ட்ரோஸ், உமாமகேஸ்வரி, அர்ஜூன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெயர் பலகை திறப்பு
பொன்னமராவதி, ஆக.27- பொன்னமராவதியில் கறிக் கடை தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங் கத்தின் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கிளைத் தலைவர் எஸ்.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் கே.முகம தலி ஜின்னா சிஐடியு கொடியை ஏற்றி னார். கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பு மணவாளன் பெயர் பலகையை திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமார், வி.ஆர்.எம் சாத்தையா, சங்க கிளை செயலாளர் என். ரபீக் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.