நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
திருவாரூர் அக்.13- திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இந்துஸ்தான் சமு தாய கல்லூரி இணைந்து நடத்திய நெகிழி ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தொடங்கி வைத்தார். பேரணியில் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து ஸ்தான் சமுதாய கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியன் செஞ்சி லுவை சங்கத்தின் தலைவர் ராஜகுமார், செயலர் வரதரா ஜன், அரிமா கண் மருத்துவமனை மருத்துவர் பாலா, இந்தி யன் செஞ்சுலுவை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் வலம்புரி வடுகநாதன் மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழி ப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. பேரணியை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட் தலைமை வகித்தார்.
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பொன்னமராவதி, அக்.13- புதுக்கோட்டை பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகளுக்கான டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை தூதுவர் அடை யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை நிர்மலா, பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமராஜ், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், பள்ளி சுகாதார மன்ற பொறுப்பாளர் விஜயலெட்சுமி, பள்ளி ஆசிரியைகள் மீனாட்சி, ராணி, அழகேஸ்வரி, சுதா ஆசிரியர் அருள்ராஜ் மருத்து வமனை பணியாளர் தங்கராஜ், டெங்கு முன் தடுப்பு களப் பணி யாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறை வாக டெங்கு எதிர்ப்பு சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ள ப்பட்டது.
பண்ணை வீட்டில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
கடமலைக்குண்டு,அக்.13- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் உள்ள வீட்டின் முன்பாக வளர்க்கப்பட்டு வந்த இரண்டு சந்தன மரங்க ளில் ஒன்றை கடந்த மாதம் மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு பண்ணை வீட்டில் இருந்த மற்றொரு சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இதுதொடர்பாக பண்ணையில் பணி யாற்றும் பூபதிராஜா நேற்று மயிலாடும்பாறை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.