மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஆக.16 மருத்துவ முகாம்
குடவாசல், ஆக. 14 -திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி- குடவாசல் வட்டார வள மையம் இணைந்து குடவாசல் அகர ஒகையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆகஸ்ட் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 6 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளு க்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. குடவாசல் அகர ஒகையில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதி ப்பீட்டு முகாம் நடைபெறும் இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை சார்ந்த சிறப்பு மருத்து வர்கள் மற்றும் மனநல மருத்துவர், உடலியக்க குறைபாடு களை கண்டறியும் மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், மாற்றுத் திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்க வும், உதடு பிளவு, எலும்பு சார்ந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரைக்க உள்ளனர். மேலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெறு வதற்கு ஏற்கனவே அடையாள அட்டை பெற்றிருப்பின் தற்போது ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு குடவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரகுபதி தெரிவித்துள்ளார். இம்முகாமில் கலந்து கொள்வோர் தங்கள் குழந்தை யின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4, அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்க ளுடன் வருமான சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி புத்தக திருவிழா பொது அரங்கம்
மன்னார்குடி, ஆக.14-மன்னார்குடி புத்தக திருவிழாவின் 5-ம் நாள் மாலை பொது அரங்கம் என்.ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. ரோட்டரியன்கள் ஜி.தமிழ்வாணன், பி.சங்கர லிங்கம், பி.மதுசூதனன், எம்.ராமதாஸ், ஜேசிஐ எம்.பி.சரவ ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரியன் ஆர். பாலமுருகன் வரவேற்றார். தமிழ்நாடு மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் முனைவர் சம்பத் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் என்.மணிமாறன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார்.
தேசிய திறனறிதல் தேர்வு
மன்னார்குடி, ஆக.14-மன்னை ஜேசிஐ அமைப்பு சார்பில் தேசிய மேல்நி லைப் பள்ளி, செயிண்ட் ஜோசப் பள்ளி, எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேசிய திறன றிதல் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 500 மாண வர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தேசிய மேல்நிலைப்ப ள்ளியில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு ஜேசிஐ மன்னை தலைவர் வேதா முத்தமிழ்செல்வம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் டி.எல்.இராதாகிருஷ்ணன் தேர்வை துவக்கி வைத்துப் பேசினார். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்ப ட்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மண்டல மாநாட்டில் விருதுகள் வழங்கப்படும்.
மக்கள் தொடர்பு முகாம்
தரங்கம்பாடி, ஆக.14-நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் புதனன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையில் நடைபெற்ற முகாமில் குடிமனை பட்டா, ஸ்மார்ட் கார்டு முதியோர், விதவை களுக்கான உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள் என 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.