மன்னார்குடி அக்.21- திருவாரூர் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக உலக மனநல நாள் நிகழ்ச்சி மன்னார்குடி தேசிய மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது. பள்ளியின் தலை மையாசிரியர் த.லெ.ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரி யர் ஆர்.உலகநாதன் முன் னிலை வகித்தார். முதுகலை வேதியியல் ஆசிரியர் எஸ்.கமலப்பன் வரவேற்றுப் பேசினார். மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை உளவியல் ஆலோச கர் தி.யோகாம்பாள் மற்றும் சமூக பணியாளர் டி.கவிதா ஆகியோர்கலந்து கொண்ட னர். விடலை பருவத்து மாண வர்கள் மற்றும் மாணவிக ளுக்கு ஏற்படும் உடல் ரீதி யான மாற்றங்கள், உடல், மன தேவைகள், மனவெழுச்சி, தற்கொலை எண்ணங்கள், சமூக வளைதளங்களினால் ஏற்படும் சிந்தனை மாற்றங் கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் உரை யாற்றினார். மாணவர்களின் வினாக்க ளுக்கு உளவியல் ரீதியாக தற்கொலை செய்து கொள்வ தற்கு அதிக மனதைரியம் வேண்டும் அதே தைரி யத்தோடு பிரச்சனைகளை எதிர் கொண்டால் வாழ்வில் உயரலாம் என்ற ஆலோ சனை வழங்கப்பட்டது. “தற்கொலை எண்ணமும் அதனை தடுக்கும் வழிமுறை களும்” என்னும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி யில் பன்னிரெண்டாம் வகுப்பு ஏ பிரிவு மாணவன் எஸ்.சத்ய நாராயணன் முதல் பரிசும் பத்தாம் வகுப்பு பி பிரிவு ஆர். மாதேஷ் இரண்டாம் பரிசும், ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவு மாணவி ஜே.கல்பனா சாவ்லா மூன்றாம் பரிசும் பெற்றனர். நிறைவாக முதுகலை இயற்பியல் ஆசிரியர் எஸ். அன்பரசு நன்றி கூறினார்.