மன்னார்குடி, ஜூன் 24- திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறி வியல் துணைக்குழு சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சூரிய கிர கணத்தை பாதுகாப்பாய் பிரத்யேக கண்ணாடி மூலம் மக்கள் பார்க்க ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப் பட்டது. கூப்பாச்சிக் கோட்டை, உள்ளிக்கோட்டை, கீழத்தி ருப்பாலக்குடி மற்றும் மன்னார்குடி, கொடராச்சேரி, முத்துப் பேட்டை, கோட்டூர் திருவாரூர் பகுதிகளில் அறிவியல் இயக்க தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்தனர். திருவாருரில் மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சாந்தகுமாரி, முத்துப்பேட்டையில் மாவட்ட பொருளாளர் வா.சுரேஷ், ஒன்றிய செயலாளர் ப.சோமசுந்தரம் மன்னார்குடியில் மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி, மாநில செயற் குழு உறுப்பினர் வி.தேவதாசன், அ.முரளி கொராடச்சேரி யில் ஒன்றிய செயலாளர் ப.குமார், ேதாட்டூடுல் மாவட்ட தலைவர் தை.புகழேந்தி, மாவட்ட இணைச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் முகநூல் பக்கத்தில் சூரிய கிரகணம் பார்ப்பது குறித்த விளக்க மும், சூரிய கிரகணம் பற்றிய மூடநம்பிக்கைகள் குறித்தும் பதிவிட்டிருந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பாராட்டுதலும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.