tamilnadu

img

கல்வி உரிமை பறிப்புக்கு எதிர்ப்பு திருவாவூர், திருச்சி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம்

குடவாசல், ஜூலை 26- திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் வடகண்டத்தில் மாணவர்களை பாதிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கை யெழுத்து இயக்கம் துவங்கியது. கையெழுத்து இயக்கத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலா ளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். வடகண்டம் கிராமத்தில் துவங் கிய கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்தாக வழக்கறி ஞர் ராஜா தனது கையெழுத்தை பதிவிட்டு துவக்கி வைத்தார் தொடர்ந்து திருக்கண்ண மங்கை, அரசவணங்காடு, பெரும்பண்ணை யூர் என பல்வேறு ஊராட்சிகளில் ஏழை எளிய விவசாய விவசாய தொழிலாளர்கள் கிராமப்புற மாண வர்களின் கல்வியை பாதிக்கச் செய் யும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன், எஸ்.ஏ.ராஜ் மற்றும் வி.ச.ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் மன்னார்குடி நகரில் அரசு கலைக் கல்லூரி, வஉசி சாலை மற்றும் பல்வேறு கல்வி நிறு வனங்களிலும் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை ஏற்றார். முஸ்லீம் மக்கள் மத்தியில் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் புதிய கல்விக் கொள்கையை விளக்கி உரையாற்றினார். பின்னர் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.  மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா, நகரக்குழு உறுப்பி னர்கள் எம்.சிராஜுதீன், கே.அகோ ரம், பி.கலைச்செல்வி ப.தெட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் நாள் இயக்கத் தில் 1620 பேர் புதிய கல்விக் கொள் கைக்கு எதிராக கையெழுத்திட்டனர். மன்னார்குடி ஒன்றியக்குழுவின் சார்பாக லெட்சுமாங்குடி  பாலத் தடியில் கையெழுத்து இயக்கம் துவங்கியது. ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். பாய்க்காரத் தெரு, புதுப்பாலம், பெரிய கடைத்தெரு மற்றும் சுற்றுப்புற மக்கள் மத்தியில் கையெழுத்து பெறப்பட்டன. மாலையில் வடபாதி மங்கலம் எதிரே பிரச்சாரமும் கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ. தங்கவேலு, கே.டி.எம்.நூர்முகம் மது, வி.லெட்சுமணன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்ட னர்.  சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கையெழுத்து இயக் கத்தில் பங்கேற்றனர். 1550 பேர் புதிய கல்விக் கொள்கைக்கு எதி ராக கையெழுத்திட்டனர். 

திருவெறும்பூர்
கட்சியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் கடைவீதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் லாசர் தொடங்கி வைத் தார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், ஒன்றிய செய லாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பெல் இடைக்கமிட்டி செயலாளர் அருள்மொழி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் அருணன், பெல் சிஐடியு பொது செயலாளர் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கிலிமுத்து, குரு நாதன், ராதாகிருஷ்ணன், சுதாகர், கணேசன், ராமமூர்த்தி, தங்கவேல், பெரியசாமி, மாரியம்மாள், யமுனா தேவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.