tamilnadu

img

கொரோனா தொற்றால் பலியான ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக! வருவாய்த்துறையினர் பட்டினிப் போராட்டம்

கரூர்/திருவாரூர், ஆக.5- கோவிட்-19 தொற்றால் உயிர்பலியான வருவாய்த்துறை ஊழியர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த அடிப்படையில் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். உயர்தர சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோரிக்கைக்கு ஆதரவாக 397 வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பட்டினி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.மகேஷ் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் டி.எஸ்.அசோக் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.ராஜமாணிக்கம் போராட்டத்தை துவக்கி வைத்தார். சங்க மாநில பொருளாளர் வெ.சோமசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் உ.சண்முகம், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கரூர்

கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

 

;