tamilnadu

img

நல்லாசிரியர் விருது வழங்கல்

மன்னார்குடி, செப்.5- மன்னார்குடி தேசிய மேனி லைப்பள்ளி கணினி ஆசிரியர் என்.ராஜப்பா(55) இந்தாண்டு நல்லா சிரியர் விருது பெற்றுள்ளார். 32 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர் சேவையில் குறிப்பிடத்தகுந்த பங்கு பணி ஆற்றியமைக்காக  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் தினத்தன்று நடைபெற்ற விழாவில் மாநில அரசால் இவ்விருது வழங்கப்பட்டுள் ளது. கணினி ஆசிரியர் என்.ராஜப்பா தோழமையுடன் கூடிய உறவோடு மாணவர்களுக்கு கணினி பாடத்தை கற்பதில் முன்னுதாரணமாக திகழ்பவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மன்னார்குடி நகரத்தின் முன்னணி தலை வர்களில் ஆசிரியர் என்.ராஜப்பாவும் ஒருவர். அனைத்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகள், துளிர் இல்ல நடவடிக்கைகள், மாணவர்கள் வினாடி வினா  உள்ளிட்ட நிகழ்வுகளில் இன்றளவும் தன்னை ஈடுபடுத்திக் கொண் டுள்ளவர்.  கடந்த பத்து ஆண்டுகளாக என்.எஸ்.எஸ்.-இன் மாவட்ட தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். ஊர்காவல் படை, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண் தானம், உடல் தானம், ரத்த தானம் உள்ளிட்ட சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரு பவர். இவருக்கு  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் வாழ்த்துக்களை பாராட்டுக்களை தெரிவித்தனர்.