tamilnadu

img

மன்னார்குடி பள்ளி விளையாட்டு விழா

மன்னார்குடி: மன்னார்குடி எஸ்.பி.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா பள்ளியின் தாளாளர் ப.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகி ஆர்.அனிதா, கல்வி ஆலோசகர் ஏ.சாந்தி, ஒருங்கிணைப்பாளர் ஐ.பாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் ப.செந்தமிழன் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.  பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் அமைப்புச் செயலர் ராச. ராசேந்திரன் மன்னார்குடி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் சண்முகம் ஆகியோர் பரிசு வழங்கினர். நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் மார்க்ஸ், விஜயகுமார், விசித்திரா ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் உ.தமிழ்செல்வன் வரவேற்றார். ஆசிரியர் திவ்யா நன்றி கூறினார்.

;