tamilnadu

கே.பாலகிருஷ்ணன் பேட்டி... 1ம்பக்கத் தொடர்ச்சி

அமைக்க மத்திய தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. 

வீடுகள்-வியாபாரிகளுக்கு பாதிப்பு
மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கோவில் வந்துவிட்டால், அக்கோவிலைச் சுற்றி நூறு மீட்டருக்குள் எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது. இருக்கின்ற கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும். திருவாரூர் கோவிலைச் சுற்றி நூறு மீட்டருக்குள் இருக்கின்ற வீடுகளை இடிக்க வேண்டுமெனில் என்னாகும்? தமிழகத்தில் உள்ள கோவில்களைச் சுற்றி பூ விற்பவர்கள் போன்ற சாதாரண சிறு வியாபாரிகள் உள்ளனர். இவர்களை அப்புறப்படுத்தும் நிலைமை ஏற்படும்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் கோவில்களில் பூஜைகள் சமஸ்கிருத மொழியில்தான் நடைபெறும். தமிழ் மொழி புறக்கணிக்கப்படும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனைஅனுமதிக்கக்கூடாது. இறை நம்பிக்கை யுடையவர்களுக்கு கூட இச்செயல் நியாயமாக இருக்காது. 

கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள் ஆகியோருக்கு அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நீண்டகாலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இதனால் கோவில் நிலங்களில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடையாணை பெறப்பட்டு, விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு உறுதியாக வாதாடி,கோவில் நிலங்கள், வக்போர்டு நிலங்களில்குடியிருப்பவர்களுக்கு அதனை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலங்களுக்குரிய பணத்தை தமிழக அரசு கோவில் பெயரில் டெபாசிட் செய்யவேண்டும்.கோவில் நிலங்களை குடியிருப்ப வர்களுக்கு சொந்தமாக்கவில்லை என்றால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடிசை வீட்டில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும். கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வாழ்வாதாரம் முக்கியமானது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

;