குடவாசல், ஆக.21- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் 86 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவு குறியீட்டு(QR) அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் பெயர், தந்தை பெயர், முகவரி, மாணவர் தொடர்பு எண், பிறந்த தேதி, மாணவர் எமிஸ் எண், கல்வித் துறையின் இலவச ஆலோசனை எண் 14417 ஆகிய விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அடையாள அட்டையில் உள்ள விரைவு குறியீட்டை ஸ்கேன் செய்தால் http://smartcard.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவரின் விபரத்தை அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப் பட்டுள்ளது.