tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்ட அமலாக்க அறிவிப்பு மத்திய அரசை கண்டித்து சிபிஎம் முற்றுகை

திருவாரூர், ஜன.31- டெல்டா மாவட்டங்களை அழிக்கும் சிந்தனையோடும், கார்ப்ப ரேட் கம்பெனிகளை வாழ வைக்கும் விஸ்வாசத்தோடும், மக்கள் விரோத பாரதிய ஜனதா கட்சியின் மத்திய  அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஜனநாயக விரோத அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. மக்களின் கருத்துகளை அறியாமலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறா மலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள லாம் என மத்திய அரசு அறிவித்துள் ளது. அரசின் இந்த அறிவிப்பை கண் டித்தும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை முற்றாக கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமையில் முற்றுகை போராட் டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிவேல், வி.எஸ். கலியபெருமாள், நா.பாலசுப்ரமணி யன், கே.தமிழ்மணி, ஆர்.குமார ராஜா, எம்.சேகர், பி.கந்தசாமி, மாவட் டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமி யப்பன், எஸ்.ராமசாமி, மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்பு சாமி மற்றும் இடைக்கமிட்டி செய லாளர்கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், உறுதியான முறையில் கொள்கை முடிவெடுத்து இத்திட்டத்தினை நிறுத்திட நடவடிக்கை எடுக்காத மாநில அரசைக் கண்டித்தும் போ ராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் திருவாரூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

;