tamilnadu

ஜன.31-ல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம்

திருவாரூர், ஜன.26- சிபிஎம் மாவட்ட செயற்குழு கூட்டம் திரு வாரூரில் தோழர் பி.ராமமூர்த்தி நினை வகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பி. கந்தசாமி தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஐ.வி.நாக ராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி தெரிவிக்கையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண் டும் என்று தொடர் போராட்டங்கள் நடை பெற்று வரும் சூழலில் மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் இல்லாம லும், மக்களின் கருத்து கேட்பு இல்லாம லும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறை வேற்றலாம் என்று கார்ப்பரேட் முதலாளி களுக்கு வாசலை திறந்துவிட்டுள்ளது.  மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து அனைத்து கட்சிகளும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. பல்வேறு போராட்டங்களும் தொடங்கியுள்ளன. ஏழை எளிய தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வா தாரமாக விளங்க கூடிய விவசாயத்தை முற்றாக அழித்து விடுவது என்ற முனைப்பு டன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை திருவாரூர் மாவட்டக்குழு வன் மையாக கண்டிக்கிறது.  காவிரி நதி நீர் பாயும் டெல்டா மாவட்டங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிப்பதோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 31ஆம் தேதி திருவாரூரி லுள்ள தலைமை அஞ்சலகம் முன்பாக மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து தலைமை யில் பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி முற்றுகை போராட்டத்தில் கட்சி ஈடுபட உள் ளது. வாழ்வாதார உரிமைக்காக எதிர் காலத்தில் நிகழ இருக்கும் அபாயத்தை தடுத்து நிறுத்த சமூக அக்கறையுடன் அனைத்து பகுதி மக்களும், விவசாயிகளும், குறிப்பாக இளைஞர்களும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று சிபிஎம் கேட்டுக் கொள்கிறது என்றார்.

;