tamilnadu

img

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் கொள்முதல் நிலைய சோதனையை முறைப்படுத்துக! சிபிஎம் வலியுறுத்தல்

திருவாரூர், பிப்.15- நெல் கொள்முதல் நிலையங்க ளில் அதிகாரிகள் நடத்தும் சோதனை களை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் முறைப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக வைக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஜி. சுந்தரமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: நெல் கொள்முதல் நிலை யங்களில் நடைபெறும் சோதனைக ளால், அங்கு பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் பாதிக்கப்படுகின்ற னர். கொள்முதல் பணிகளில் பணிபுரி பவர்கள் தற்காலிகப் பணியாளர்க ளே. இவர்களுக்கு கொள்முதல் நேரங்களில் மட்டுமே பணி கிடைக் கும். மற்ற நேரங்களில் இவர்கள் பணிகளை எதிர்பார்க்க முடியாது. இதனால், இவர்களின் வாழ்வாதா ரம் இந்தப் பணிகளின் மூலமே நிவர்த்தியாகிறது. ஆனால், தற்போது அதிகாரி கள் சோதனை என்ற பெயரில், நெல் கொள்முதல் நிலையங்களில் பல மணி நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்க ளில் பணிபுரியும் தற்காலிகப் பணியா ளர்கள், தங்கள் வழக்கமான கொள் முதல் பணிகளை செய்ய முடியாமல், அதிகாரிகளுக்கு பதில் அளிப்பதி லேயே நேரத்தை செலவிட வேண்டி யுள்ளது. ஒரு கொள்முதல் நிலை யத்துக்கு சோதனை என்ற பெயரில் வரும் அதிகாரிகள், ஏறத்தாழ மாலை 4 மணி வரை கூட அந்த நிலையத்தில் இருப்பதாக பணியாளர்கள் தெரி விக்கின்றனர். இந்த சோதனையால், கொள் முதல் பணிகள் பாதிக்கப்பட்டு, விவ சாயிகளும் காத்திருக்க வேண்டி யுள்ளது. கொள்முதல் பணி தாமதத்து க்கு அந்த நிலையத்தின் பணியாளர்க ளின் மீதே புகார் தெரிவிக்கப்படுகி றது. இதனால், தற்காலிகப் பணியா ளர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு, பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சோதனை என்ற பெயரில் கொள்முதல் நிலையப் பணியாளர்க ளை அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும். சோதனைகளை முறைப் படுத்த வேண்டும். கொள்முதல் பணி களை தாமதப்படுத்துவதையும், விவ சாயிகளை காத்திருக்க வைக்கும் நட வடிக்கைகளையும் கைவிட வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, தாமதமில்லா மல் உடனடியாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;