திருவாரூர், ஆக.6- திருவாரூர் ஆட்சியர் வளாகத்தில் நுழைவாயில் அருகே மரம் ஒன்று விழுந்த நிலையிலும், அரசின் தகவல் பலகை சாய்ந்த நிலையிலும் ஆண்டுக் கணக்கில் சீர்செய்யப்படாமல் மாவட்ட நிர்வாகத்தின் கவனமின்மையை வெளிக்காட்டுகிறது. இயற்கை பேரிடர் காலத்தில் முறிந்த மரத்தை அப்புறப்படுத்தி அதற்கு மாற்றாக வேறு ஒரு மரக்கன்றை நடுவ தற்கு அரசின் எந்தவிதி தடுக்கின்றது என்று தெரியவில்லை. இதைவிடவும் முக்கியமாக சாய்ந்து கிடக்கும் தகவல் பலகையில் இருக்கும் விபரங்கள் இந்த துறை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் “ஏதோ ஒரு கடமைக்கு” ஒரு தகவல் பலகை யை வைத்து விட்டோம், வேறு எந்த பொறுப்பும் இல்லை என சமந்தப்பட்ட துறை சொல்வது போல் தெரிகிறது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பலகை யில் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை அரசின் உரிய அனுமதி இல்லாமல் வெட்டி எடுத்துச் செல்லக் கூடிய சமூக விரோதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவ தற்காக மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் பல துறைகளின் தொலை பேசி எண்கள் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி காவல்துறை அதிகாரிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள், வட்டாட்சியர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துறை களின் தொலைபேசி எண்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு முக்கி யத்துவம் வாய்ந்த இந்த தகவல் பலகையை சரிசெய்வதற்கு எத்தனை லட்சம் செலவாகிவிடும். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தகவல் பலகையை பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி உடனடியாக சரிசெய்து வைத்திட வேண்டும். வீழ்ந்து கிடக்கும் மரத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடப் பட்டுள்ள மரக்கன்றுகளையும், வளர்ந்துள்ள மரங்களையும் பாது காப்பதற்கென ஆட்சியர் தனது நேர டியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.