tamilnadu

img

பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் தமிழக அரசிற்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை

திருவாரூர், பிப்.24- ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சங்கத்தின் முன்னணி ஊழியர்களுக்கான கூட்டம் திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.ராஜமாணிக்கம் தலைமை வகித் தார். செயலாளர் வெ.சோமசுந்தரம் வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், பொருளாளர் மு.பாஸ் கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சௌந்த ரராஜன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் உ.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் சி.பிரகாஷ் நன்றி கூறி னார். மாவட்ட நிர்வாகிகள் வி.சிவக் குமார், எம்.மூர்த்தி, வி.சி.குமார், டி. எஸ்.சுபலெட்சுமி (துணைத் தலை வர்கள்), ஆர்.தனபால், டி.மணிவண் ணன், எஸ்.சுதாகர், கே.எஸ்.செந்தில் (இணைச் செயலாளர்கள்) மற்றும் அனைத்து வட்டக் கிளை நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசு ஆணை எண்.56-ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறை களில் அவுட் சோர்சிங்க் மற்றும் ஆட் குறைப்பு முறைகளை கைவிட வேண்டும். அரசு துறைகளில் உள்ள 4.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்லேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;