tamilnadu

img

தோழர் ரங்கசாமி காலமானார்

திருத்துறைப்பூண்டி, மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோமல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தோழர் எம்.ரெங்கசாமி (65) உடல்நலக் குறை வின் காரணமாக காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவர் காலமான செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகா னந்தம், சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், திமுக ஒன்றிய துணை தலைவர் எம்.ராம கிருஷ்ணன் மற்றும் அனைத்து கட்சி தலை வர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.