tamilnadu

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 திருவாரூர், அக்.1- திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளில்(பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் கால்நடை களுக்குரிய தடுப்பூசி மருந்தினை அரசு வழங்கியுள்ளது. தடுப்பூசிப் பணிகள் 14-ம் தேதி முதல் டிசம்பர் 12 வரை கிராம வாரியாக நடைபெறும். கால்நடை மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களில் காலை 6 முதல் 9 மணி வரை யிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தடுப்பூசிப் பணி மேற்கொள்வார்கள். கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசிக் குழுவினர் வரும் பொழுது தங்க ளிடமுள்ள 3 மாதத்திற்கு மேல் வயதுள்ள கன்று, சினைப் பசு, கறவைப்பசு, எருமை மற்றும் எருதுகளுக்கும் தவறா மல் தடுப்பூசியினை போட்டுக் கொண்டு பயன் பெறுமாறு திருவாரூர் ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார். 

;