tamilnadu

img

தோழர் எம்.செல்லமுத்து நினைவு தினம்

திருவாரூர் ஜூலை 25- உழைக்கும் மக்களின் இதயங்களில் நிலைத்து வாழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் தோழர் எம்.செல்லமுத்து 23-ஆம் ஆண்டு நினைவு தினம் திருவாரூர் மாவட்டத்தில் உணர்வு பூர்வமாய் கடை பிடிக்கப்பட்டது. கட்சி யின் மாவட்டக்குழு அலுவ லகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அவரது சொந்த ஊரான திருவாரூர் ஒன்றியம் புதூர் நமச்சிவாயபுரத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. புதூர் கடைவீதியில் நடை பெற்ற நினைவு தின பொ துக்கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ்.ஏ.  பக்கிரிசாமி தலை மையேற்றார். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நாகை.மாலி பங்கேற்று தோழர்.எம்.செல்லமுத்து நினைவுகளை பகிர்ந்து கொ ண்டார். மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் ஜி.பழ னிவேல், ஜி.ஸ்டா லின்(நாகை), ஒன்றிய செய லாளர் என்.இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.மாதவன், ராஜாங்கம், கண்ணுசாமி, மூத்த உறுப்பினர் கந்தசாமி, அம்மாசி, கணேசன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.