tamilnadu

img

‘மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்’ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஜூன் 29- பருத்திக்கு மத்திய அரசு நிர்ண யம் செய்த விலையை கொள்முதல் செய்திட கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக திருவாரூர் மாவ ட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை ரூ.5,515, ரூ.5,875 என்ற அடி ப்படை விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும். ஒழுங்குமுறை வேளாண் விற்பனை நிலைய அதிகாரிகள்-வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து பருத்தியை குறைந்த விலைக்கு ஏலம் எடு க்கும் ஊழலை அனுமதிக்கக் கூடாது.  விவசாயிகளிடம் இருந்து பருத்தி  (தாட்)சாக்கு-க்கு ரூ.20 பிடித்தம்  செய்யக் கூடாது. வேளாண் நிலை யத்திற்கு வரும் விவசாயிகளின் சுகா தாரம் காக்க கழிவறை, குடிநீர் வசதி, தங்குமிடம் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள், தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;