tamilnadu

img

கலைத்திறன் போட்டி வெற்றி பெற்ற கல்லூரிகள் 

 மன்னார்குடி, ஜூலை 31- ஜேசிஐ மன்னை சார்பாக இளையோர் ஜேசி மண்டல மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. 10 மாவட்டங்க ளைச் சார்ந்த 15 கல்லூரிகளிலிருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இளையோர் ஜேசி மண்டல இயக்குநா் ஹெச்.ரிர்ச்சர்டு ராஜ் தலைமை வகித்தார்.  முன்னாள் மண்டலத் தலைவா் வி.எஸ்.கோவிந்த ராஜன், மண்டலத் துணைத்தலைவா் ஈ.இராபா்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர். மண்டலத் தலைவா் பி.ஜி.கைலாஷ் மாநாட்டை துவங்கி வைத்தார். தமிழ் இந்து நாளிதழின் ஆசிரியர் சமஸ் துவக்க உரையாற்றி னார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் மருத்துவர் வா.சி.அசோக்குமார், குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.தா்மராஜ், சின்னத்திரை பின்னணி இசைக்கலைஞர் அனு ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகளில் மன்னார்குடி இராஜகோபால சாமி அரசினா் கலைக்கல்லூரி மாணவர்கள் முதல் பரி சினையும், திருவாரூர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசினையும், நாகப்பட்டினம் சா்.ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் பரிசினையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசும் கேடயங்களும், பங்குப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. ஜேசிஐ மன்னை தலைவா் எம்.வி.முத்தமிழ்ச்செல்வம், செயலாளர் கே.வினோத், திட்டத்தலைவர் ஜி.ராஜ்குமார், மண்டல இயக்குநா் எஸ்.ராஜமோகன் ஆகியோர் நிகழ்ச்சி யை ஏற்பாடு செய்தனா். நிறைவாக மண்டலச் செயலா ளர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார்.