பொன்னேரி, ஜன.21- பொன்னேரியை அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). தொழிலாளி. திங்களன்று மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது மனைவி வெளியில் சென்று இருந்தார். அப்போது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்த போது நெருப்பை அணைக்காமல் விட்ட தாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் குடிசை யில் நெருப்பு பரவி பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் வீட்டில் உள்ள ரூ.1000 பணத்தை எடுத்து வருவதற்காக சுப்பிரமணி மீண்டும் குடிசை வீட்டுக்குள் சென்றார். இதில் அவர் தீயில் சிக்கினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து சுப்பிர மணியை மீட்டனர். உயிருக்கு போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.