tamilnadu

img

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் தோல்வி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் அபாரம்

திருவள்ளூர், மே 23-திருவள்ளூர் (தனி) மக்களவை  தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து  முன்னிலை வகித்து வருகின்றார்.திருவள்ளூர்(தனி) மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முனைவர் ஜெயக்குமார் போட்டியிட்டார். அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் போட்டி யிட்டனர். இந்நிலையில் வியாழனன்று (மே 23) காலைமுதல் வாக்குகள் எண்ணப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் முன்னிலை பெற்று வந்தார். 9 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட ஜெயக்குமார் 1 லட்சத்து 15ஆயிரத்து 929 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். ஜெயக்குமார் 5லட்சத்து 86 ஆயிரத்தி 246 வாக்குகளும் அதிமுகவேட்பாளரும் இந்த தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவருமான பி.வேணுகோபால் 3 லட்சத்து  ஆயிரத்தி 308 வாக்குகளும் பெற்றனர். இதேபோல்,  பெருமாள்பட்டு சிறீராம்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை வகித்து வந்தார். 441 தபால் வாக்குகள் பதிவானதில்  திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி 345-வாக்குகள் பெற்றார். 26 சுற்றைத் தொடர்ந்து,அதிமுக வேட்பாளர் வைத்தியநாதனை விட திமுக வேட்பாளரான கிருஷ்ணசாமி சுமார் 40 ஆயிரம் வாக்குகள்  முன்னிலை பெற்றிருந்தார் கிருஷ்ண சாமிக்கு 1லட்சத்து 7ஆயிரத்தி 408 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்  ஜி. வைத்திய நாதனுக்கு 60 ஆயிரத்தி 263 வாக்குகளும் கிடைத்திருந்தன.  

;