tamilnadu

img

தமிழக-ஆந்திர மாநில எல்லைகள் அடைப்பு

திருவள்ளூர், மார்ச் 21- கொரோனா வைரசை  தடுக்கும் வகை யில் தமிழக ஆந்திரப் பிரதேச மாநில எல்லை களை இணைக்கும் சாலைகள் அடைக்கப் பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் குமாரமங்களம், தளவாய்பட்டு, கோர குப்பம், கள்ளடப்பேட்டை, ஆர்.கே.பேட்டை யில் ஜனகராஜகுப்பம், விடியங்காடு (அம்மையார்குப்பம்), திருத்தணியில்  பொன்பாடி, சிவாடா, கனகம்மாசத்திரம், ஊத்துக்கோட்டையில் ஊத்துக்கோட்டை 1, 2, பென்னாலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி யில் ஆரம்பாக்கம், பொம்மான்ஜிபுரம் (கவ ரப்பேட்டை) ஆகிய தமிழக - ஆந்திர‌ மாநில  எல்லைகளை  இணைக்கும் சாலைகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வாகனப் போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக மார்ச் 31ஆம் தேதி வரை  மூடப்படுகிறது.  இந்த சாலைகளில் கீழ்க்கண்ட வாக னங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களான பால்,  பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள்,  ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள். தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற  காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள். பொது  மக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனுமதிக்கப்படும்.  எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும்  நோய் தடுப்பு பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்க ளும்  நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்ப டுத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு  திருவள்ளூர் மாவட்ட  ஆட்சித் தலைவர்  மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.