tamilnadu

சட்டவிரோத நடவடிக்கையில் செமன் ஸ்டேஷன் நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் தலையிட சிஐடியு வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூலை 2 - பேரிடர் மேலாண்மை சட்டம்  அமலில் இருக்கும், சட்டவிரோத மாக செயல்படும் செமன் ஸ்டேஷன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சோழவரம் அருகே அலமாதியில் மத்திய அரசு நிறுவனமான செமன் ஸ்டேஷன் (காளை மாடுகளில் இருந்து வீரிய விந்து சேகரிக்கும் நிலையம்) செயல்பட்டு வருகிறது. இங்கு 50 தொழிலாளர்கள் ஒப்பந்த  முறையில் கடந்த ஐந்து வருடங்க ளாக வேலை செய்து வருகின்றனர். இதற்கு முன் ஒப்பந்தக்காரர்கள் மூன்று முறை  மாறியும், தொழி லாளர்கள் யாரும் மாற்றம் செய்யப் படாமல் தொடர்ந்து வேலை செய்து  வருகின்றனர். இந்த செமன் நிறுவனம், இந்தியா  முழுவதும் வியாபாரம் செய்கிறது.  செமன் ஸ்டேஷன் நிர்வாகம் மத்திய தொழிலாளர் ஆணையாளர்  முன்னிலையில், 30-9-2022 வரை  தொழிலாளர்கள் பணியாற்றிட ஊதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தம் அமலில் இருக்கும்போதே ஒப்பந்தக்காரர் காலம் முடிந்து விட்டது என்று நிர்வாகம் தவறான தகவலை தந்துள்ளது. ஜூலை 1 முதல் தொழிலாளர்களை சோழவரம் காவல்துறை உதவியுடன் பணிக்கு செல்லவிடாமல் நிர்வாகம் தடுத்து வருகிறது. பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி இல்லா மல் மத்திய தொழிலாளர் ஆணை யாளர் முன்பு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேலையை விட்டு நிறுத்த கூடாது. ஆனால் சோழவரம் காவல் துறையினர் புதிய ஒப்பந்தக்காரருக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். அலமாதி செமன் ஸ்டேஷன் நிர்வாகம் ஒப்பந்தப்படி கூலி கொடுக்க முடி யாது, கூலியை குறைத்துதான் கொடுக்க முடியும் என்கிறது. இதை தொழிலாளர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். நிர்வாகத்தில் உள்ள அதிகாரி கள் வாங்கும் சம்பளத்தில் 6ல் ஒரு  பகுதியான 11 ஆயிரம் ரூபாயை மட்டுமே தொழிலாளர்கள் பெறு கின்றனர். இதையும் குறைப்பதற்கு மத்திய அரசு நிறுவன அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு காவல் துறை துணை போகிறது. மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவு இல்லா மல் தொழிலாளர்களை பணிக்கு செல்வதை தடுக்கிறது. இதனை தடுக்க தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;