tamilnadu

img

ரூ. 33 கோடி நிலுவையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் தபால் அனுப்பி போராட்டம்

திருவள்ளூர், ஜீன் 1 -  கரும்பு விவசாயிகளுக்கு ரூ.33 கோடி பாக்கி தொகையை  வழங்க  வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 1)  திருவள்ளூரில் விவசாயிகள் தபால் அனுப்பும் போராட் டத்தை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், திரு வாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு மாவட்டம் முழுவதி லும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வருகின்றனர். விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு  மாநில அரசின் பரிந்துரை விலை அடிப்படையில் 2015-16 மற்றும் 2016-17  ஆகிய இரு ஆண்டுகளுக்கு வழங்க  வேண்டிய நிலுவை ரூ.16 கோடியை யும், சர்க்கரை ஆலை 2019-20ம் ஆண் டிற்கான நியாயமான அடக்கவிலை (எப்ஆர்சி) ரூ.17 கோடியையும் பாக்கி வைத்துள்ளது.

மொத்தமாக ரூ.33 கோடியை சர்க்கரை ஆலை பாக்கி வைத்துள்ளது. இந்தத் நிலுவைத் தொகையை வழங்க தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு  சர்க்கரை ஆலை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நிலு வைத் தொகையை உடனடியாக வழங்க  வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் இந்த தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பொன்பாடி, திருவாலங்காடு, திரு வள்ளூர், சீத்தஞ்சேரி, போந்தவாக்கம் உள்ளிட்டு 40-தபால் நிலையங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள், மாநில சர்க்கரை துறை ஆணையருக்கு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தபால்  அனுப்பினர். இந்தப்போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  தலைவர் பி.பாபு, செயலாளர் சி.பெரு மாள், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயச்  சந்திரன், பகுதி நிர்வாகி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;